1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 23 நவம்பர் 2020 (08:46 IST)

மழை மட்டும் அல்ல சுழற்றி வீசும் சூறாவளி!!

காற்றழுத்த தாழ்வு பகுதியால் இன்று தென்மேற்கு மற்றும் தமிழக கடலோரப் பகுதியில் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை. 
 
தென்மேற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு சமீபத்தில் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்து அதன்பின் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். 
 
பின்னர் இது புயலாக மாறும் என்றும் நிவர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயல் நவம்பர் 25 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. 
 
எனவே வரும் 25 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், ஆகிய பகுதிகளில் மிக கனமழை இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. 
 
சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த புயல் காரணமாக கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையாகயும் இருந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் இன்று தென்மேற்கு மற்றும் தமிழக கடலோரப் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிமி வேகத்திலும் இடையிடையே 65 கிமி வேகஹ்தில் வீசக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 
 
நாளை மற்றும் நாளை மறுநாள் சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிமி வேகத்திலும் இடையில் 75 கிமி வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.