தொடர்புடைய செய்திகள்
- கொரோனா, காற்று மாசு, பட்டாசு தடை… வீழ்ச்சியடையும் பட்டாசு தொழில்? – தீபாவளி சிறப்பு கட்டுரை!
- தமிழ்நாட்டுக்கு தனி கொடி - சீமான் மீது வழக்குபதிவு
- கொரோனாவால் பாதித்தவர்கள் பட்டாசு வெடிக்கக்கூடாது: புது நிபந்தனை
- 5 வழக்குகளில் 4 வழக்கில் ஜாமின் பெற்ற சிவசங்கர் பாபா!
- ரூ 1 லட்சத்திற்கு பட்டாசு... கிராம நண்பர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த மணிமேகலை!
அனுமதி இல்லாத நேரத்தில் பட்டாசு வெடிப்பு: சென்னையில் 22 வழக்குகள் பதிவு!
அனுமதிக்காத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக சென்னையில் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது
இந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரத்தில் பட்டாசு வெடித்ததாக சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராயப்பேட்டை காவல் நிலையம், கீழ்ப்பாக்கம் காவல் நிலையம், டிபி சத்திரம் காவல் நிலையம், ஓட்டேரி காவல் நிலையம், ஆவடி காவல் நிலையம், ஆயிரம் விளக்கு காவல் நிலையம், நுங்கம்பாக்கம் காவல் நிலையம் ஆகியவற்றில் மொத்தம் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது
கடந்த ஆண்டு இதே சென்னையில் 425 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
