வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (13:08 IST)

சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்: துரை வைகோ அறிவிப்பு..!

சென்னை மற்றும் நெல்லை இடையே இன்று வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது என்றும் பிரதமர் மோடி காணொளி மூலம் இந்த ரயிலை தொடங்கி வைக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த ரயில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு டிக்கெட்டுக்களூம் ஏற்கனவே விற்பனை ஆகி உள்ளது. 
 
இந்த நிலையில் சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. இதனை வலியுறுத்தி நாளை கோவில்பட்டி ரயில் நிலையத்தில்  ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என துரை வைகோ தெரிவித்துள்ளார் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
Edited by Siva