ஞாயிறு, 3 டிசம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (18:44 IST)

ஓமன் பயணத்தை முடித்து சென்னை திரும்பிய அஜித்குமார்

ajithkumar
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் சினிமாவின் நடிப்பதுடன் கார், பைக் ஓட்டுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அஜித்குமார்,  ஐரோப்பியாவில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதையடுத்து, ஓமனில் அஜித் பைக் ஓட்டும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலானது.

இந்த நிலையில், ஓமன் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அஜித்குமார் சென்னை திரும்பியுள்ளார். எனவே விரைவில் மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகும் விடாமுயற்சி பட ஷுட்டிங்கில் கலந்துகொள்ளவே அஜித் சென்னை திரும்பியுள்ளாதக தகவல் வெளியாகிறது.

எனவே இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அடுத்த வாரம் ஷூட்டிங் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.