சட்டப்படிப்பு படிக்க புதிய தகுதி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
இதுவரை சட்டப் படிப்பு படிப்பதற்கு 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் டிகிரி ஆகியவை தகுதியாக இருந்த நிலையில் தற்போது 10ஆம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் சட்ட படிப்பு படிக்கலாம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த கோமதி என்ற மாணவி தான் 10ஆம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் பெற்றுள்ளதாகவும்,ஆனால் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் தன்னைப் சட்டப் படிப்பு படிப்புக்கு அனுமதிக்கவில்லை என்றும் வழக்கு தொடர்ந்திருந்தார்
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் 12ஆம் வகுப்பு , டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் படித்திருந்தாலும் சட்டப் படிப்பு படிப்பதற்கு தகுதி உடையவர்தான் என அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran