1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological warning for rain in 8 districts

இன்று இரவு தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கொட்டப்போகிறது கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Chennai Rain
தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியில் உள்ள அறிவிப்பில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் குறிப்பாக வலுவான தரைக்காற்று காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளிலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
பாஜக ஆட்சியில் ஒருவர் மட்டும்தான் பிரதமராக முடியும்.! மற்றவர்களுக்கு உரிமையில்லை..! ராகுல் காந்தி..