ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 29 ஜூலை 2024 (16:09 IST)

பாஜக ஆட்சியில் ஒருவர் மட்டும்தான் பிரதமராக முடியும்.! மற்றவர்களுக்கு உரிமையில்லை..! ராகுல் காந்தி..

Rahul
பாஜக ஆட்சியில் ஒருவர் மட்டும் தான் பிரதமராக முடியும் என்றும் மற்றவர்களுக்கு உரிமை என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
 
நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி,  பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சர்களே பயத்துடன் உள்ளதாக தெரிவித்தார். மகாபாரதத்தில் அபிமன்யூ சக்கர வியூகத்தில் சிக்கியது போல தற்போது இந்திய மக்களின் நிலை உள்ளது என்றும் பாஜகவின்  சக்கர வியூகம் நாட்டு மக்களுக்கு உதவவில்லை என்றும் அவர் கூறினார்.
 
சக்கர வியூகத்திற்குள் துரோணர், கர்ணன், அஸ்வத்தாமன் இருந்தது போல் இங்கு மோடி, அமித்ஷா உள்ளனர் என்று ராகுல் காந்தி கடுமையாக பேசினார். மேலும் பாஜக ஆட்சியில் ஒருவர் மட்டும்தான் பிரதமராக முடியும் என்றும்  மற்றவர்களுக்கு உரிமையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு மூலம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்