1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological center warning rain

இன்றிரவு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Chennai Rain
இன்று இரவு தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
அந்த அறிவிப்பில் ராணிப்பேட்டை, திருவள்ளூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், திருப்பூர், கோவை, வேலூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ஜம்மு எல்லை பகுதியில் ஒரு இன்ச் கூட விடாமல் சீல் வைக்கப்படும்: டிஜிபி அறிவிப்பு..!