1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological says rain in four districts

இன்னும் 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் மழை: வானிலை அறிவிப்பு

rain
இன்னும் இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில வாரங்களாகவே சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் இந்த மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அதுமட்டுமின்றி வளிமண்டல சுழற்சி காரணமாகவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் அதாவது கடலூர், மயிலாடுதுறை, ஈரோடு, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை அறிவிப்பு தெரிவித்துள்ளது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
64.61 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!