வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 27 நவம்பர் 2022 (12:48 IST)

சென்னை அருகே இந்திராகாந்தி சிலை அகற்றம்: காங்கிரஸ் கட்சியினர் பரபரப்பு!

indhira gandhi
சென்னை அருகே இந்திராகாந்தி சிலை அகற்றம்: காங்கிரஸ் கட்சியினர் பரபரப்பு!
சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இந்திரா காந்தி சிலை அகற்றப்பட்டதால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே இந்திரா காந்தி சிலை ஒன்று இருந்தது. இந்த நிலையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக இந்திரா காந்தி சிலையை அகற்ற வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை காங்கிரஸ் கட்சியினருக்கு கோரிக்கை விடுத்தது
 
இந்த கோரிக்கையை காங்கிரஸ் கட்சி கண்டு கொள்ளவில்லை என்பதால் தேசிய நெடுஞ்சாலை துறையினர் தகுந்த பாதுகாப்புடன் அந்த சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்
 
அப்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் என்றும் தாங்களே இந்திரா காந்தி சிலையை அகற்றி விடுவோம் கூறியதை அடுத்து தேசிய நெடுஞ்சாலை துறையினர் சிலையை அகற்றும் பணியை கைவிட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் காரணமாக சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது
 
Edited by Siva