1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological says rain in five districts today

இன்று காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Chennai Rain
இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

மேலும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ளதால் இன்னும் ஒரு நாளில் தமிழக கடலோர பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து மேற்கண்ட 5 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
டெலிகிராம் செயல் அதிகாரி பாவெல் துரோவின் கைது.. -பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் விளக்கம்..!