வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (20:47 IST)

பிரதமர் மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை.. 3 நாள் மழைக்கு தாங்காமல் இடிந்ததா?

கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் பிரதமர் மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை திடீரென சுக்கு நூறாக உடைந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்ரபதி சிவாஜியின் பிரம்மாண்டமான சிலை இன்று மதியம் ஒரு மணி அளவில் உடைந்து உள்ளது. 35 அடி உயர சிலையை பிரதமர் மோடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறந்து வைத்த நிலையில் ஒரு ஆண்டு முழுமையாக முடிவதற்குள் இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 சிலையின் தரம் குறித்து தற்போது கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. சிலை உடைந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை எந்த தகவலும் சொல்லவில்லை என்றும் சம்பவம் இடத்திற்கு சென்று சிலையை ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சிலை உடைந்ததற்கு மாநில அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் நிகழ்ச்சியில் நடத்துவதில் காட்டிய கவனம் சிலையின் தரத்தில் காட்டவில்லை என்றும் என்சிபி சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன

இந்த நிலையில் மகாராஷ்டிரா அமைச்சர் இதுகுறித்து கூறிய போது சிலை உடைந்ததற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றும் உரிய விசாரணை நடத்தி மீண்டும் அதே இடத்தில் சத்ரபதி சிவாஜிக்கு சிலை நிறுவப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited by Siva