1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Indian meteorological center says about low pressure

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஆகஸ்ட் 29ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு, தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக மாறுமா என்பது இன்னும் ஒரு நாளில் கணிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வரும் நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதை அடுத்து கடலோர பகுதிகளில் மீண்டும் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 29ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவானால் அதன் பின்னர் தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவருக்கு நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..!