தமிழகத்தில் ஆகஸ்ட் 30ம் தேதி வரை வெளுக்கப் போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மழை பெய்து வரும் நிலையில் இன்று முதல் 30 ஆம் தேதி மிதமான மழை முதல் கனமழை வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை மழை பெய்யும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் விடை மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி, மத்திய வங்க கடல், வடக்கு அந்தமான் கடல் ஆகியவை ஆகிய பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் சில நேரங்களில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Mahendran