வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (13:24 IST)

கடல் கடந்து சென்றாலும் கவனம் எல்லாம் தமிழகம் மீது தான்.! முதல்வர் ஸ்டாலின்.!!

MK Stalin
கடல் கடந்து சென்றாலும், கவனம் எல்லாம் தமிழகத்தின் மீது தான் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா செல்கிறார். இதையொட்டி திமுகவினருக்கு அவர் எழுதிய கடிதத்தில், மக்களிடம் நற்சான்றிதழை பெற அமைச்சரவை கூட்டத்திலும், மாவட்ட செயலாளர் கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

செயலில் வேகம், சொற்களில் கவனம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு பணியாற்றுங்கள் என்றும் கடல் கடந்து சென்றாலும், கவனம் எல்லாம் தமிழகத்தின் மீது தான் இருக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விமர்சனம், விவாதம் செய்பவருக்கு நாம் நிறைவேற்றும் பயனுள்ள செயல்கள் பதில்களாக அமையட்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை அடைய உங்களில் ஒருவனாக பயணிக்கிறேன் என்றும் தமிழகம் சிறக்க அயல்நாட்டுக்கு சிறகு விரிக்கிறேன் என்றும் உங்கள் வாழ்த்துகளுடன் பறக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அயல்நாடு சென்றாலும், தமிழகத்தில் எந்த ஒரு பணியும் தடைபடாமல் நடைபெற வேண்டும் என்று முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். பயணத்தின் நோக்கம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பல தலைமுறைகளுக்கு பயன் தர வேண்டும் என்பது தான் என்று அவர் கூறியுள்ளார். 

அரசு நிர்வாகம் தொய்வின்றி தொடர அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வலியுறுத்துகிறேன் என்றும் ஆட்சிப்பணி, கட்சிப் பணிகளை ஒருங்கிணைந்து கண்ணியத்துடன் நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.