1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological center warning about rain

34 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Chennai Rain
இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் 34 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
Edited by Mahendran
 
அடுத்த கட்டுரையில்
உதயநிதி ஸ்டாலின் என்னை கண்டு அஞ்சுகிறார்.! புதிய வழக்கு போட முயற்சி.! கொக்கரித்த சவுக்கு சங்கர்..!!