வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (09:21 IST)

நடுவானில் இயந்திரக் கோளாறு.. லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தின் நிலை என்ன?

Flight
லண்டனில் இருந்து சென்னை வரவேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நடுவானில் , திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் லண்டனுக்கே  திரும்பி சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் நேற்று இரவு , லண்டனில் இருந்து சென்னைக்கு  சுமார் 240  பயணிகளுடன்  புறப்பட்டு, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நடுவானில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, லண்டனுக்கே திரும்பிச் சென்று விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன்பின்னர் அந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை உடனடியாக சரி செய்ய முடியாததால் விமானம் ரத்து செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில்  இன்று சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமும் ரத்து என்று அறிவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய  பயணிகள் துபாய், தோகா, அபுதாபி வழியாக   சென்றனர். ஆனால் சில பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். 
 
இந்த நிலையில் சில பயணிகள் சென்னை  ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை  சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும் விமானத்தில் அவர்கள் பயணம் செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva