தொடர்புடைய செய்திகள்
- சிறைக்கு செல்ல ஆசைப்பட்டு பெட்ரோல் குண்டு வீசிய ரெளடி.. சென்னையில் பரபரப்பு..!
- 4 நாள் சரிவுக்கு பின் திடீரென உயர்ந்த தங்கம்.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?
- அறநிலையத்துறை சார்பில் புதிய வணிகத்தை சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்!
- சென்னை அண்ணாநகரில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்வு: போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு..!
- வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி: வானிலை ஆய்வு மையம்..!
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் தமிழகத்தில் உள்ள கோவை, திருப்பூர், நீலகி,ரி தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது. இதனை அடுத்து மேற்கண்ட 3 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran
