தொடர்புடைய செய்திகள்
- ஓட ஓட விரட்டி இளைஞரை குத்தி கொலை-சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் தேடுதல்வேட்டை!
- தமிழகம் முழுவதும் 18 சிறைச்சாலைகளை மூட உத்தரவு? என்ன காரணம்?
- சூப்பர்ஹீரோவா இருந்தாலும் ரூல்ஸ் ஒன்னுதான்! ஸ்பைடர்மேனுக்கு அபராதம் விதித்த போலீஸ்!
- வினாத்தாளை கசியவிட்டால் 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம்! மசோதா நிறைவேற்றம்..!
- இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்..!
சிறைக்கு செல்ல ஆசைப்பட்டு பெட்ரோல் குண்டு வீசிய ரெளடி.. சென்னையில் பரபரப்பு..!
சென்னை அண்ணாநகர் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசிய ரெளடி சிறைக்கு செல்ல ஆசைப்பட்டு இவ்வாறு செய்ததாக கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணாநகரில் உள்ள இரண்டு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக போலீசாருக்கு தகவல் வந்த நிலையில் அங்கு சென்று பார்த்த போது சிசிடிவி கேமராவை பதிவை ஆய்வு செய்தனர். இதில் பெட்ரோல் கொண்டு வீசியது அண்ணா நகரை சேர்ந்த ரெளடி பாலமுரளி என்று தெரியவந்தது.
ரெளடி பாலமுரளி மீது ஏற்கனவே கொலை முயற்சி அடிதடி ஆகிய வழக்குகள் இருக்கும் நிலையில் அவரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் சிறைக்கு செல்ல ஆசைப்பட்டதாகவும் அதனால் தான் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியது.
மேலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசியதும் போலீசாருக்கு சந்தேகத்தை வரவழைத்தது. இதனை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கவுன்சிலிங் அளித்திருப்பதாகவும் மருத்துவர் தரும் அறிக்கையை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அண்ணா நகரில் போலீஸ் பூத், டாஸ்மாக் கடை முன்பு பெட்ரோல் குண்டு வீசி இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் இல்லை என்று கூறப்படுகிறது.
Edited by Mahendran
