1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 27 ஜூலை 2024 (14:37 IST)

மம்தா பானர்ஜி முழுமையாக பேசவிடாமல் தடுப்பதா.? பாஜக அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!!

Stalin Modi
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை முழுமையாக பேச விடாமல் தடுத்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  
 
டில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்  நடைபெற்று வருகிறது. மத்திய பட்ஜெட்டில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டதாகக் கூறி, இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தனர். 
 
Mamtha
மம்தா வெளிநடப்பு:
 
ஆனால் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டம் தொடங்கி சிறிது நேரத்திலேயே அவர் வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, நிதி ஆயோக் கூட்டத்தில் பாரபட்சம் காட்டுவதாகவும், ஐந்து நிமிடங்களுக்கு மேல் என்னை பேச விடவில்லை எனவும் குற்றம் சாட்டினார். 
 
Stalin
முதல்வர் ஸ்டாலின் கண்டனம்:
 
இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை முழுமையாக பேச விடாமல் தடுத்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை இப்படியா நடத்துவதா? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
எதிர்க்கட்சிகளை எதிரிகள் போல் ஒடுக்க நினைக்கக் கூடாது என்றும் எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை ஒன்றிய அரசு புரிந்துக் கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

 
இதுதான் கூட்டாட்சி தத்துவமா?. சந்திரபாபு நாயுடுவை 20 நிமிடம் பேச அனுமதித்து விட்டு, தனக்கு 5 நிமிடமே தரப்பட்டதாக மம்தா கூறியதை சுட்டிக் காட்டி முதல்வர்  ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.