1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai meteorological center warning about heat

அடுத்த 2 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கோடை காலம்
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
தமிழகத்தில் மழைக்காலம் மற்றும் குளிர்காலம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் வெயில் காலம் ஆரம்பித்து விட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் படிப்படியாக வெப்பம் அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட இரண்டு முதல் மூன்று டிகிரி உயர வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
எனவே கோடை காலத்தில் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் தகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 
 
ஏப்ரல் மற்றும் மே மாதம் இன்னும் வெப்பம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
கபே உணவகத்தில் வெடித்த மர்மபொருள்!