திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (16:03 IST)

இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்ப நிலை இருக்கும் என்றும் எனவே பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ’
 
மழைக்காலம் மற்றும் பனிக்காலம் முடிவடைந்து கோடை காலம் தொடங்க உள்ளது என்பதும் மார்ச் முதல் கடும் வெயில் அடிக்க தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்றும் நாளையும் வழக்கத்தைவிட  தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்றும் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தென் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் மற்றும் டெல்டா பகுதிகளில் ஒரு இடங்களில் லேசாக மழைக்கு வாய்ப்பு இருந்தாலும் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
Edited by Siva