1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2024 (15:13 IST)

கபே உணவகத்தில் வெடித்த மர்மபொருள்!

cafe restaurant,
பெங்களூரில் ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கபே உணவகத்தில் சத்தத்துடன்  மர்ம பொருள் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடகம் மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
 
இந்த நிலையில், இன்று பெங்களூரில் ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கபே உணவகத்தில் சத்தத்துடன்  மர்ம பொருள் வெடித்தது.
 
இந்த வெடிவிபத்தில்   4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
 
சிலிண்டல் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதா? இல்லை குண்டுவெடிப்பா என இதுவரை தகவல் வெளியாகவில்லை.
 
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த காவல்துறை உயரதிகாரிகள வெடிவிபத்து பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.