செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 7 ஆகஸ்ட் 2021 (10:22 IST)

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோவையில் மழை!

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 

 
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 
 
மேலும் திருமயம், வானூர், வால்பாறை, சோலையாறு, சிவகங்கை , தேவாலா, செஞ்சி, மயிலம், கூடலூர் பஜாரில் 2 செ.மீ. மழை பொழிந்துள்ளது. அரிமளம், புலிப்பட்டி, ராசிபுரம், திருப்பத்தூர், திருவிடைமருதூர், கீழ்பெண்ணாத்தூரில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.