தொடர்புடைய செய்திகள்
- போதையற்ற தமிழகத்தை உருவாக்கிடுவோம்- எடப்பாடி பழனிசாமி டுவீட்
- ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு புதிய கார் வழங்கிய நடிகர் கமல்ஹாசன்
- குடை ரெடியா? 3 மணி நேரத்தில் செம மழை..! – எந்தெந்த மாவட்டங்களில்?
- வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை..!
- அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் இன்று முதல் 30-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் வளைகுடா குமரி கடல் பகுதி மற்றும் வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வரை சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Siva
