குடை ரெடியா? 3 மணி நேரத்தில் செம மழை..! – எந்தெந்த மாவட்டங்களில்?
தென்மேற்கு பருவமழை சீசன் நடந்து வரும் நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் அவ்வபோது மழை பெய்து வரும் நிலையில் இன்றும் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி, திருப்பத்தூர், திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edit by Prasanth.K