புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 ஜூன் 2023 (08:00 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த மூன்று மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்கள் சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள கடலூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
 மேற்கண்ட 9 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
 
Edited by Siva