திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 26 ஜூன் 2023 (15:55 IST)

16 வயதினருக்கும் பாலுறவில் ஈடுபடும் முடிவை எடுக்கும் திறன் இருக்கும்: நீதிமன்றம் கருத்து..!

16 வயதில் பாலுறவில் ஈடுபடும் திறன் ஒருவருக்கு இருக்கும் என்று மேகாலயா மாநில நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
மேகாலயா மாநிலத்தில் 16 வயது சிறுவன், சிறுமி ஒருவருடன் பாலுறவில் ஈடுபட்டதாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தன்னை விடுவிக்க வேண்டும் என்று மேகாலயா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்
 
நான் பாலியல் வன்முறையில் ஈடுபடவில்லை என்றும் அந்த பெண்ணும் நானும் ஒருவர் ஒருவர் விரும்பி இருவரும் ஒப்புதல் தான் பாலுறவு நடந்தது என்றும் எனவே போக்சோ சட்டத்தின் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். 
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 16 வயதில் பாலுறவில் ஈடுபடுவது ஈடுபடுவது குறித்த தீர்க்கமான முடிவை எடுக்கும் திறன் அவர்களுக்கு உண்டு என்று இந்த நீதிமன்றம் நம்புவதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன் என்று தெரிவித்தார்.
 
Edited by Siva