1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological center says about rain

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம்

rain
தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்த பின்னர் வறண்ட வானிலையை நிலவி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் காற்று திசை வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பப்படுகிறேன்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் பேட்டி