திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 21 ஜனவரி 2023 (11:18 IST)

சென்னையின் முக்கிய பகுதியில் 2 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம்..!

Traffic
ஏற்கனவே மெட்ரோ ரயில் பணிய காரணமாக சென்னையின் ஒரு சில பகுதிகளில் ஆண்டு கணக்கில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
 இந்த நிலையில் மேம்பால பணி காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளான கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது. 
 
வியாசர்பாடி மற்றும் கொருக்குப்பேட்டை மட்டுமின்றி எம்பி கே நகரில் ஒரு மாதம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள பழைய மேம்பாலம் புனரமைக்கப்பட உள்ளதை அடுத்து இன்று முதல் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran