திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 ஜனவரி 2023 (13:48 IST)

காதல் கடிதம் கூட எழுதும்.. ஐடி வேலைக்கு ஆப்பு வைக்கும் Chat GPT??

Chat GPT
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறையில் உலகம் பெரும் வளர்ச்சியை எட்டி வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள சாட் ஜிபிடியால் பலரது வேலைவாய்ப்பு பறிபோகலாம் என அஞ்சப்படுகிறது.

நாளுக்கு நாள் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் ஐடி துறை வேலைவாய்ப்புகளுக்காக பலரும் படித்து வருகின்றனர். ஆனால் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் ஐடி ஊழியர்கள் பணிகளுக்கே ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் டிசைனிங் துறையில் உருவாக்கப்பட்ட சில செயற்கை நுண்ணறிவு செயலிகள் பலரது உள்ளீட்டையும் பெற்று போட்டோக்களை அழகான ஓவியமாக மாற்றுவது, பல்வேறு ஓவியங்களை தானாகவே உருவாக்குவது என செயல்பட்டன. இதனால் டிசைனர்கள், ஓவியர்களின் இடத்தை செயற்கை நுண்ணறிவு ஆக்கிரமித்துவிடும் என அஞ்சப்பட்டது.

அப்படியா ஒரு அச்சத்தை தற்போது சாட் ஜிபிடி Chat GPT என்ற செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தியுள்ளது. உதாரணத்திற்கு இந்தியாவின் பொருளாதார நிலை குறித்த கட்டுரை ஒன்றை தயாரிக்க சொன்னால் இணையதளத்தில் உள்ள பல தரவுகளையும் ஆராய்ந்து ஒரு பொருளாதார அறிஞர் அளிக்கும் அறிக்கைக்கு நிகரான கட்டுரையை தயாரித்து வழங்குகிறதாம்.

அதுபோல தேர்வுக்கு தேவையான தேர்வு தாள் வினாக்களை தயாரித்தல், அலுவலக மெயில்கள் எழுதுதல், என தொடங்கி காதல் கடிதம் வரை சிறப்பாக எழுதி தருகிறதாம் இந்த சாட் ஜிபிடி. மேலும் ஜாவா கோடிங் உள்ளிட்ட கணினி மொழிகளிலும் ப்ராஜெக்ட் செய்வது உள்ளிட்டவற்றிலும் இது ஈடுபடுவதால் இந்த பணிகளுக்காக ஆட்களை நியமிப்பது குறைந்து முழுவதும் சாட் ஜிபிடியின் ஆதிக்கம் ஏற்படுமோ என்று பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Edit By Prasanth.K