1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 2 நவம்பர் 2022 (18:03 IST)

சென்னை வந்தார் மம்தா பானர்ஜி: முதல்வர் முக ஸ்டாலினுடன் முக்கிய பேச்சுவார்த்தை!

mamtha
சென்னை வந்தார் மம்தா பானர்ஜி: முதல்வர் முக ஸ்டாலினுடன் முக்கிய பேச்சுவார்த்தை!
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சற்று முன் சென்னை வந்துள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
 
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஆனால் அந்த கூட்டணியில் காங்கிரஸ் வேண்டாம் என எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில் திமுக மட்டும் காங்கிரஸ் கட்சியுடன் தான் தேர்தல் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறி வருகிறது 
 
இந்த நிலையில் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் இல்லத்தில் அவரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது 
 
மேற்கு வங்க கவர்னர் கணேசனின் சகோதரர் கோபால் அவர்களின் 80வது பிறந்த நாள் சென்னையில் நடைபெற உள்ளதாகவும் அதற்காகத்தான் மம்தா பானர்ஜி சென்னை வந்ததாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva