1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 2 நவம்பர் 2022 (21:46 IST)

சென்னையில் இருந்து அந்தமானுக்கான விமான சேவைகள் ரத்து!

plane
சென்னையில் இருந்து அந்தமானுக்கு இயக்கப்படும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக அந்தமான் சிறந்த சுற்றுலாத் தளமாக அறியப்படுகிறது.

இங்கு, இந்தியாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இதனால்,இவர்கள் செல்லும் விமானங்களின் டிக்கெட் விற்றுத் தீர்ந்துவிடுதால், மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

தற்போது பருவமழைக் காலம் என்பதாலும், அந்தமானில் மோசமான வானிலை, மற்றும் அங்குள்ள விமான நிலையத்தில் பராமரிப்பு பணீகள் நடப்பதால் சென்னையில் இருந்து  விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

எனவே, வௌம் 4 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து, அந்தமானுக்குச் செல்லும் 7 விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, மீண்டும், இந்தச் சேவைகள் 5 ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Sinoj