1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai mechanic rob his neighbour house

பூட்டை உடைக்காமலே திருட்டு.. சிக்கிய பலே மெக்கானிக்! – சென்னையில் பரபரப்பு!

Chennai
சென்னையில் யூட்யூப் பார்த்து போலி சாவி தயாரித்து திருடிய மெக்கானிக்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் வீடு ஒன்றின் முதல் தளத்தில் வசித்து வருபவர் பாலாஜி. கட்டிட ஒப்பந்ததாரரான இவர் சமீபத்தில் தனது மனைவியுடன் வெளியே சென்று விட்டு இரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர்களது பீரோவில் இருந்த நகைகள் மொத்தமாக திருடப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் தன் வீட்டின் மேல் தளத்தில் வசிக்கும் சந்திரசுதன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக பாலாஜி கூறியுள்ளார். சந்திரசுதனிடம் மேற்கொண்ட விசாரணையில் திருடியதை சந்திரசுதன் ஒப்புக் கொண்டுள்ளார்.

பாலாஜி வீட்டு சாவியை கோதுமை மாவில் நகல் எடுத்து யூட்யூப் வீடியோக்களை பார்த்து போலி சாவி செய்து சத்தமில்லாமல் சென்று திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
திருப்புதல் தேர்வா? மினி பொதுத்தேர்வா? தேர்வுத்துறையின் முக்கிய அறிவிப்பு!