செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (13:30 IST)

பாண்டி பஜார் வணிக வளாகத்தில் திடீர் தீ! – சென்னையில் பரபரப்பு!

சென்னை பாண்டி பஜாரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் தி நகர் பாண்டி பஜார் பகுதியில் ஏராளமான கடைகளும், வணிக வளாகங்களும் செயல்பட்டு வருகின்றன. மக்கள் அதிகமாக பொருட்கள் வாங்க வரும் பகுதி என்பதால் எப்போது கூட்ட நெரிசலாக இந்த பகுதி இருக்கும்.

இந்நிலையில் இன்று பாண்டி பஜாரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திடீரென தீப்பிடித்துள்ளது. 3 தளங்கள் கொண்ட வணிக வளாகத்தில் தீப்பற்றிய நிலையில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் மிகுந்த போராட்டத்திற்கு பின் தீயை அணைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் வளாகத்தில் செயல்பட்டு வந்த ஜவுளிக்கடை மற்றும் பைனான்ஸ் அலுவலகம் ஆகியவை சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.