புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 5 பிப்ரவரி 2022 (12:32 IST)

மீண்டும் மன்னிப்பு கோரிய சித்தார்த்!

சென்னை காவல்துறையினரின் விசாரணையின் போது நடிகர் சித்தார்த் மீண்டும் மன்னிப்பு தெரிவித்தார். 
 
பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்த நடிகர் சித்தார்த் அவரிடம் மன்னிப்பு கேட்டார். சித்தார்த் தான் டுவீட்டில் பதிவு செய்தது சரியாக புரிந்து கொள்ளப்படாமல் எனது நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டார். 
 
மேலும் அப்போது நடிகர் சித்தார்த்துக்கு தேசிய மகளிர் ஆணைய  நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த நடிகர் சித்தார்த்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்தார். 
 
இந்நிலையில் சென்னை காவல்துறையினரின் விசாரணையின்போது நடிகர் சித்தார்த் மன்னிப்பு தெரிவித்தார். சர்ச்சை கருத்துக்கு எதிராக எதிர்ப்பு எழுந்த நிலையில் நடிகர் சித்தார்த் ட்விட்டரில் மன்னிப்பு கோரியிருந்தார். நடிகர் சித்தார்த்தின் வாக்குமூலத்தை மகளிர் தேசிய ஆணையத்திற்கு சென்னை காவல்துறை அனுப்பி வைத்தது.