1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai market vegetables price increased

சென்னையை வெளுத்த கனமழை; விலை உயர்ந்த காய்கறிகள்!

Tamilnadu
சென்னையில் கனமழை பெய்ததால் காய்கறி வரத்து குறைந்துள்ள நிலையில் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளில் கிலோ ரூ.80க்கும், அவரைக்காய் கிலோ ரூ.80க்கும், கேரட் ரூ.70க்கும், பீன்ஸ் ரூ.80க்கும் விற்பனையாகி வருகிறது. காய்கறிகளின் வரத்து வரும் நாட்களில் அதிகரித்தால் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!