புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 13 நவம்பர் 2021 (21:35 IST)

தமிழக அதிகாரி பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு!

கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டவர் ராதாகிருஷ்ணன். இந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்து முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போதிலும் ராதாகிருஷ்ணன் மக்கள் நல்வாழ்த்துறை செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில்,  மக்கள் நல்வாழ்த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பலை  கண்டுபிடித்துள்ளனர்.

எனவே, போலி ஃபேஸ்புக் கணக்கை நம்பி ஏமாற வேண்டாம் என ராதாகிருஷ்ணன் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.