1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai marina special way opened again

சென்னை மெரினாவில் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை மீண்டும் திறப்பு!

marina
சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு பாதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டது என்பதும் அந்த பாதை மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.
 
 ஆனால் இந்த சிறப்பு பாதை மாண்டஸ் புயல் காரணமாக திடீரென சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இந்த பாதை விரைவில் சரி செய்யப்படும் என சென்னை மேயர் ப்ரியா அவர்கள் தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இந்த பாதை சரி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது 
 
சென்னை மெரினா கடற்கரையில் மாண்டஸ் புயலில் சேதமடைந்த மாற்றுத்திறனாளி பாதை சரிசெய்யப்பட்டதாகவும், ஆனால் கடல் அருகே பார்வையிடும் பகுதி மட்டும் மழைக்காலம் முடிந்தவுடம் சீரமைக்கப்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
பாகிஸ்தான் பயங்கரவாத மையமாக உள்ளது- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்