1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 அக்டோபர் 2023 (08:06 IST)

கடலூர் 12ம் வகுப்பு மாணவன் ஜீவா கொலை வழக்கு.. குற்றவாளி அதிரடி கைது..!

கடலூர், ஸ்ரீமுஷ்ணம் அருகே 12ம் வகுப்பு மாணவன் ஜீவா கொலை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை, தாம்பரத்தில் குற்றவாளி ஆனந்தை கைது செய்த தனிப்படை போலீசார், அவர் மொட்டை அடித்து மாறுவேடத்தில் சுற்றித்திரிந்ததாகவும், அவர் சென்னையில் இருக்கிறார் என்பதை கண்டுபிடித்து ஆனந்தை சுற்றுவளைத்து போலீசார் கைது செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
ஓரினச்சேர்க்கை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
 
கடலூர், ஸ்ரீமுஷ்ணத்தில் 12ம் வகுப்பு மாணவன் ஜீவா குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில் ஜீவாவின் சகோதரியை ஆனந்த் காதலித்து வந்ததாகவும், அதற்கு ஜீவா எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த கொலை நடந்ததாக முதலில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போதைய விசாரணையில் இந்த கொலைக்கு ஓரினச்சேர்க்கை காரணம் என தெரிய வந்துள்ளது.
 
Edited by Siva