திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 24 மார்ச் 2021 (12:50 IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த வழக்கு: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு!

வரும் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்துவது குறித்து திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது 
 
வரும் சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானது என்றும் தேர்தலுக்கு முன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிக்கப்படுமா? என்றும் திமுக வழக்கு தொடர்ந்தது
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இதற்கு முன் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது? தேர்தலின்போது கண்காணிக்கப்படுமா? வாக்குப்பதிவு எந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானது? என்பது குறித்து தேர்தல் ஆணையம் வரும் 29ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது