1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 24 மார்ச் 2021 (08:14 IST)

ஆலங்குளம் தொகுதியில் கலக்கும் ஹரி நாடார்: அதிமுக, திமுக அதிர்ச்சி!

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டு படை கட்சியின் சார்பில் போட்டியிடும் ஹரிநாடார் தீவிர பிரச்சாரம் செய்து வருவது அதிமுக திமுக வேட்பாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மகன் மனோஜ் பாண்டியன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக பூங்கோதை ஆலடி அருணா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் கடுமையான போட்டி இந்த தொகுதியில் நிலவி வரும் நிலையில் திடீரென பனங்காட்டு படை கட்சியின் ஹரிநாடார் இந்த தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு ஹெல்மெட் சின்னம் கிடைத்துள்ளது 
 
நடமாடும் நகைக்கடையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹரிநாடார் தற்போது சுமார் 12 கிலோ எடை உள்ள நகையை அணிந்து கொண்டு அவர் ஒவ்வொரு வீதியாக பிரசாரம் செய்து வருகிறார். அவரது பேச்சை கேட்பதைவிட அவர் அணிந்திருக்கும் நகையை பார்ப்பதற்கு கூட்டம் அதிகம் கூடுவதாகவும் குறிப்பாக பெண்கள் அவரை பார்ப்பதற்காக பெருமளவில் வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
ஹரிநாடார் செல்லுமிடங்களில் எல்லாம் மிக அதிகம் கூட்டம் கூடுவதால் அதிமுக திமுக வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது