ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின் – ராகுல் காந்தி; திமுக பிரம்மாண்ட மாநாடு!

Stalin Rahul
Prasanth Karthick| Last Modified புதன், 24 மார்ச் 2021 (09:50 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக திமுக நடத்த உள்ள பிரம்மாண்ட மாநாட்டில் மு.க.ஸ்டாலின் – ராகுல்காந்தி ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் திமுக தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்திய நிலையில் அடுத்து சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சேலத்தில் மார்ச் 28ல் நடத்த திட்டமிட்டுள்ள இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சியான காங்கிரஸின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியும் கலந்து கொள்ளவுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல்காந்தி இருவரும் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :