தொடர்புடைய செய்திகள்
- 50 ரூபாய்க்கு புடவை; அலைமோதிய பெண்கள்! – பொள்ளாச்சி கடைக்கு அபராதம்!
- கிராமப்புற மாணவியருக்கான ஊக்கத்தொகை! – தமிழக அரசு அரசாணை!
- களைகட்டும் குட்கா விற்பனை; போலீஸார் அதிரடி ரெய்டு! – 2,983 பேர் கைது!
- புத்தாண்டுக்கு கடற்கரை செல்ல தடை; ஊரடங்கு நீட்டிப்பு! – முதல்வர் அதிரடி அறிவிப்பு!
- ஊழியர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்த நிறுவனம்
அதிமுக உள்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு! – தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
அதிமுகவில் நடந்து முடிந்த உள்கட்சி தேர்தலை எதிர்த்து அதிமுக தொண்டர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் நடந்த நிலையில் அதிமுகவின் கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த உள்கட்சி தேர்தல் அதிமுக கட்சி விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படவில்லை என்று தடை கோரி அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் பெயர் தேவையின்றி சேர்க்கப்பட்டிருந்ததால் முதலில் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இன்று நடைபெற்ற விசாரணையில் வழக்கு தொடர எந்த முகாந்திரமும் இல்லை என கூறி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
