புத்தாண்டுக்கு கடற்கரை செல்ல தடை; ஊரடங்கு நீட்டிப்பு! – முதல்வர் அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், புத்தாண்டிற்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தற்போது மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் புத்தாண்டு அன்று பொதுமக்கள் கடற்கரையில் அதிக அளவில் கூடும் நிலையில் தற்போது புத்தாண்டு மற்றும் அதற்கு முதல் நாளில் கடற்கரை செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.