தொடர்புடைய செய்திகள்
- பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்? – நிதியமைச்சர் விளக்கம்!
- 11 மாவட்டங்களுக்கு மட்டும் மின்கட்டண சலுகை?! – மின்சாரவாரியம் அறிவிப்பு!
- 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்.. கூடுதல் அவகாசம் தேவை!
- 3வது அலைக்கு ரூட் போடும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்
- மூன்று டோஸ் போடணும், 92% திறன் வாய்ந்தது! – க்யூபாவின் அப்டலா தடுப்பூசி!
திடீரென சென்னையில் உயர தொடங்கிய கொரோனா! – மக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் மீண்டும் சென்னையில் பாதிப்புகள் உயரத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்த நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. கடந்த வாரம் முதலாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களுக்கு சில தளர்வுகளும், அதிகமுள்ள மாவட்டங்களில் கட்டுப்பாட்டுடன் கூடிய ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 1,316 ஆக இருந்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இன்று 3,351 ஆக அதிகரித்துள்ளதாகவும், பாதிப்பு சதவீதம் 0.2%ல் இருந்து 0.6% ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
