வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (14:01 IST)

வாகனம் ஒட்டும் போது செல்போன் பயன்படுத்தக்கூடாது.-ஐபிஎஸ் அதிகாரி வெளியிட்ட வீடியோ

bike accident
இந்தியாவில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு, சாலைகளில் கார்களில் செல்லும்போது பெல்ட் போட வேண்டும் எனவும், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என போலீஸார் எச்சரித்து வருகின்றனர்.

ஆனால், இதை மீறி உரிய பாதுகாப்பின்றி செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகள் சிக்குகின்றனர்.

இந்த நிலையில், சாலையில் வாகனத்தில் செல்லும்போது, செல்போன் பயன்படுத்தக்கூடாது என எத்தனை விழிப்புணர்வு வீடியோக்களும், அறிவுரைகள் கூறினாலும் சிலர் கேட்பதாக இல்லை.


இந்த நிலையில், ஒரு நபர் மெயின் ரோட்டியில் , பைக்கில், செல்போனில் பேசிக் கொண்டே சென்றார். அப்போது அவர் சாலையைக் கடக்க முயன்றபோது, எதிரே வந்த ஒரு பைக் அவர் மீது மோதியது.

இதில் இருவரும் காயம் அடைந்தனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ஸ்டாலின் ஐபிஎஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என எச்சரித்துள்ளார்.