திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (21:19 IST)

2021 ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் மட்டும் 1.73 லட்சம் பேர் மரணம் ! தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை

accident
இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் மட்டும்  1.73 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு, சாலைகளில் கார்களில் செல்லும்போது பெல்ட் போட வேண்டும் எனவும், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என போலீஸார் எச்சரித்து வருகின்றனர்.

ஆனால், இதை மீறி உரிய பாதுகாப்பின்றி செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகள் சிக்குகின்றனர். இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நாட்டில் நடந்த சாலை விபத்துகளில் 1.73 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக  என்.சி.ஆர்.பி எனப்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதில், கடந்த 2021 ஆம் ஆண்டு நம் நாட்டில்  நடந்த விபத்துகளில் மட்டும் 4.22 லட்சம்  விபத்துகள் நடந்தாகவும், இதில், 1.73 லட்பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.