ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (22:47 IST)

பள்ளி ஆசிரியர்களின் ஆபாசமாக செல்போன் ஆடியோ... 2 பேர் ணியிடை நீக்கம்

teachers
கரூரில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆபாசமாக செல்போன் ஆடியோ சமூக வலைதளங்களில்  வெளியான விவகாரம் - ஆசிரியர்கள் 2 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவு.
 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வாங்கல் சாலையில் மாநகராட்சி ஜெயப்பிரகாஷ் நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) இருப்பவர் ராஜலிங்கம். கணித ஆசிரியரான இவர் தலைமை ஆசிரியர் பொறுப்பையும் கவனித்து வருகிறார். இதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் செல்வம் என்பவருக்கும், பொறுப்பு தலைமை ஆசிரியருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பொறுப்பு தலைமை ஆசிரியர் ராஜலிங்கம், மாவட்ட கல்வி அலுவலரிடம் எழுத்துபூர்வமாக புகார் அளிக்கப்பட்டதாக தெரியவருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடற்கல்வி ஆசிரியர் செல்வத்திற்கு ஆதரவாக அருகில் உள்ள மற்றொரு அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் விஜயகுமார் என்பவர் ராஜலிங்கத்தை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபசமாக பேசி கொலை மிரட்டல் ஆடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்த நிலையில் செல்போன் ஆடியோவில் பேசிய ஆசிரியர்கள் இரண்டு பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்போனில் ஆபாசமான வார்த்தைகளால் பேசியது, அவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தது, பொதுமக்களிடையே அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதற்காக ஆசிரியர்கள் விஜயகுமார், ராஜலிங்கம் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் விஜயேந்திரனை தொடர்பு கொண்டு கேட்ட போது, அந்த பள்ளியை தொடர்பு கொண்டு கேளுங்கள் என்றார், மேலும், நியூஸ் சொல்ல வாய்ப்பில்லை என இணைப்பை துண்டித்துக் கொண்டார்.