தொடர்புடைய செய்திகள்
- காவிரி விவகாரம்; சேலம் தபால் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
- கமல் ஒரு ஓய்வுபெற்ற ஹீரோ; நாங்கள் அரசியலில் ஹீரோ: அமைச்சர் ஜெயக்குமார்
- மெரினாவில் போராட்டம் - வலுக்கட்டாயமாக ஸ்டாலின் கைது
- தமிழகம் முழுவதும் கடையடைப்பு : காவிரி போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு
- மெரினாவில் போராட்டம் - வலுக்கட்டாயமாக ஸ்டாலின் கைது
காவிரி போராட்டம்: 85,00 பேர் விடுதலை!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு எதிராக இன்று நடைபெற்ற போராட்டத்தில் கைதான 85,00 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்களை முன்னெடுத்தது.அதனால் இன்று திமுக சார்பாக தமிழகமெங்கும் கடையடைப்பு அறிவிக்கப்பட்டது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும், சென்னையில் 5ம் நாளாக இன்று திமுக போராட்டத்தை கையில் எடுத்தது. சென்னை அண்ணாசாலையில் செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு விடுதலை செய்பட்டார்.
இதேபோல் தமிழகம் முழுவதும் மாணவர்கள், மாணவிகள், பொதுமக்கள் என மொத்தம் 85,00 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு எதுவும் போடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
